கம்ப்யூட்டர் சேவை மையம்.........
2003 ல் Diploma in Computer Technology மூன்று வருட பயிற்சி முடித்து 2003 to 2005 வரை சென்னை Rajalakshmi Engineering College, Thandalam என்ற கல்லூரி யில் Computer lab Technician ஆக வேலை பார்த்த அனுபவத்தில் அப்போதே தொடங்க பட்டது தான் இந்த RV Computers.
அதன் பிறகு பல இடங்களில் பல மாற்றம் பெற்றாலும் இப்போதும் வெற்றிகரமாக keezhakalkuruchi junction ல் செயல் பட்டு கொண்டிருக்கிறது.....
Desktop Service
Laptop Service
LAN, WAN Structure Mobile Service(only few models)
Printer service(only few models)
Laptop வாடைக்கு கிடைக்கும்
RV COMPUTERS NOW(2025)
RV COMPUTERS 2008
.
RV COMPUTERS 2009-2010
.
RV COMPUTERS 2017
.
RV COMPUTERS 2020
.
RV COMPUTERS 2008
.
RV COMPUTERS 2018
.
RV COMPUTERS 2019
.
RV COMPUTERS 2021
.
RV COMPUTERS 2022
.
கடந்து வந்த பாதைகள்
கடைகளை மாற்றி மாற்றி விட முடிந்த மனிதர்களால் கடையை மூடி விட மட்டும் முடியவில்லை 😂...... எத்தனை தோல்விகள்...... எத்தனை அனுபவங்கள்......
அத்தனையும் தாண்டி இன்றைய வெற்றி என்பது கடவுள் கிருபை என்று தான் சொல்ல வேண்டும் 🥰......
இரண்டாவது என்னுடைய உழைப்பு...... தொடர் முயற்சி........ அதிகாலை எழுந்து கடையை திறந்து போய் உக்காந்து உயிரற்று கிடைக்கும் laptop, computer, mobile இதனை சரி உயிர் பெற்றதும் உள்ளுக்குள் ஏறும் ஒரு சந்தோசம் 🥰🥰🥰🥰 அது ஒரு வெறி 🥰 பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தை யை கையில் வாங்குவது போன்ற உணர்வு வரும் ❤️❤️❤️❤️ அது ஒரு போதை...... பெண் போதை மது போதை என்று சொல்வது போல் இது ஒரு போதை..... அந்த போதைக்கு ஏதும் ஈடாகாது...... அப்படி ஒரு போதைக்கு அடிமை தான் இந்த ஆர்வி......
இந்த கடைகள் மூலம் கோடிகள் பார்த்தவனல்ல.பல உயிர்களை உருவாக்கியவன்....
ஆனால் எனக்கு ஆப்பு வைத்தவன், மேலே ஏறி வர முயற்சிக்கும் போது கால் பிடித்து இழுத்து விடுகிறவன், மறைமுகமா ஆப்பு வைப்பவன், என்னிடம் ஆங்கிலம் பேசி respecta மோதியவன், 8ம் வகுப்பு முடித்து MCA விடம் அட்வைஸ் பண்ணினவன் பாடம் எடுத்தவன் சொந்த காரன் என தோளில் தூக்கி எடுக்கும் அளவுக்கு தந்தவன் இப்படி பல விதங்களில் என்னை தள்ளி விட நினைத்தவன் ஒருவனாலும் தடுக்க முடியவில்லை நான் நினைத்ததை நிறைவேற்றுவதை.....
ஏன் என்றால் என் எல்லா தொழிலிலும் 80% நேர்மையும் 20% கருணையும் இருக்கும் என்பது கடவுள் அறிந்த உண்மை...... ஆனால் கடுப்பேத்தி விட் டவனுக்கு பதில் அவன் அணுகுமுறை போலவே தான் இருக்கும் 🤣..... கொஞ்சம் அதிகமாகவும் இருக்கும் 🥰
அன்பானாலும் வம்பானாலும் அளவு கடந்தால் கண்டிப்பாக திருப்பி தருவது என் இயல்பு 🥰 கொஞ்சம் அதிகமாகவே தருவேன் 🤣 ஒரு வேளை கொஞ்சம் தாமதம் ஆகும் அவ்வளவு தான்..but கண்டிப்பா தருவேன் 🥰🥰🥰இந்த இயல்பு நான் இருக்கும் வரை தொடரும்.
உண்மை கதை
எனது ஊர் உண்மை கதை
முன்பெல்லாம் cctv கேமரா அவ்வளவு கிடையாது.ஒரு சில நபர்கள் அனைவரும் தூங்கிய பின்பு ஜங்ஷன் வந்து அங்குள்ள கடைகளின் முன்பு முட்டை, குங்குமம், பூசணி காய், எலுமிச்சை பழம், திருநீறு இவைகளை பேப்பரில் மடக்கியோ அல்லது முழுமையாகவோ கடை வாசல் முன்பு விட்டு செல்வர். மறு நாள் காலை அந்த கடை நடத்தும் நபர் வந்து கடையை திறக்கும் போது இதை பார்த்ததும் பயந்து போய் அதை கடைக்கு வரும் அனைவரிடமும் கூறி 24*7 அதை பற்றியே பேசி அதையே நினைத்து பயந்து பயந்து கடைசியில் கடையை விட்டே ஓடி விடுவார்கள். அப்படி நிறைய கடைகள் மூடப்பட்டது உண்மை. இது நான் எனது அனுபவத்தில் அறிந்த உண்மை.
இதே நபர்கள் எனது கடைக்கும் முயற்சி செய்தனர். அப்போது 2017. நான் ஹோட்டல் நடத்தி கொண்டிருந்தேன். செய்வாய் கிழமை மறுநாளும் வெள்ளி கிழமை மறு நாளும் அதி காலை 4 மணிக்கு கடை திறக்க செல்லும் போது ஒரு எலுமிச்சை பழம் கொஞ்சம் திருநீறு கொஞ்சம் பூ ஒரு பேப்பரில் மடக்கி எக்கேயாவது வைத்திருப்பார்கள்.எ தேச்சையாக ஒரு நாள் இதை பார்த்ததும் அந்த பொதியை எடுத்து திறந்து பார்த்தேன். உள்ளே எலுமிச்சை பழம் இருந்தது.சற்று கூட யோசிக்காமல் அதை எடுத்து cut பண்ணி போஞ்சி போட்டு குடித்து விட்டேன் 🤣🤣🤣🤣அப்போது இரவில் rum அடிப்பத்தால் அதிகாலை போஞ்சி குடிப்பது அப்படி ஒரு சுகம் 😂😂😂😂
பிறகு வந்ததும் தேடுவேன் 😂😂😂😂 வைத்த அர மண்டைங்க கொஞ்ச நாள் ல வைப்பதை நிறுத்தி விட்டார்கள் 😂😂😂😂 இப்போது cctv கேமரா இருப்பதால் எவனுமே வைக்க வருவதில்லை 😭
ஒரு போஞ்சி மிஸ் 😂
இவைகளை வைப்பது யார் என்று பார்த்தால் அவர்களும் கடை வைத்திருப்பவர்களே தான் என்பது மற்றும் ஒரு ஆச்சர்யம் 🤣
ஆனால் அப்படி வைத்தவன் எவனும் நான்கு ஐந்து வருடம் மேல் இங்கு நிலையாக இருக்கவில்லை என்பது உண்மை 🥰🥰🥰 மற்றும் ஒரு கும்பல் இருக்கிறது.இவர்களின் குறிக்கோள் இப்படி வைத்து யார் பயப்படுகிறார்களோ அவர்களிடம் போய் அந்த பூஜை செய்தால் உன் கடை top ல வரும் இந்த பூஜை செய்தால் bill gates கு கூட நீ கடன் கொடுப்பாய் என கூறி பண்டிகை க்கு பர்ச்சஸ் பண்றது 🤣 இவர்கள் ஆட்டம் பலிக்காத ஆட்களில் ஒருவன் இந்த ஆர்வி என்பதில் பெருமிதம் கொள்கிறேன் 🥰🥰🥰
Its me RV
இது எனது அனுபவத்தில் உள்ள உண்மை 🥰